Ramadoss

Advertisment

2018-ஆம் ஆண்டை ஊழல் ஒழிப்பு ஆண்டாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இதனையொட்டி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பாமக சார்பில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர்,

எட்டுவழி சாலையால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இயற்கை வளங்கள் அழியும். ஜிண்டால் கம்பெனி இரும்புத்தாது எடுப்பதற்காகத்தான் இந்த எட்டு வழிச்சாலைகள் போடுகிறார்கள். சேலம் இரும்பு உருக்கு ஆலையை ஜிண்டால் நிறுவனத்துக்கு விற்க பார்க்கிறார்கள்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

தமிழகத்தில் தினம் தினம் ஊழல், பங்கு போட்டு ஊழல், அனைத்திலும் ஊழல் என ஊழல் ஆட்சிதான் நடந்து வருகிறது. இ.பி.எஸ்சும், ஒ.பிஎஸ்சும் போட்டி போட்டு கல்லா கட்டி வருகிறார்கள். மத்திய அரசின் பினாமி அரசாக, அவர்கள் சொல்வதை அப்படியே செய்கிறார்கள். ஊழலை ஒழிப்போம் என்று சொல்லும் மத்திய அரசு, ஊழல் ஆட்சி செய்யும் தமிழ்நாடு அரசை அகற்ற ஏன் முன் வரவில்லை?

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

தமிழகத்தில் 17 பேர் முதல்–அமைச்சராக இருந்துள்ளார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரும் ஊழல் செய்து இருக்கிறார்கள். அவர்கள் மத்திய அரசுக்கு எப்போதாவது வளைந்து கொடுப்பார்கள். ஆனால் தற்போதைய ஆட்சி அப்படி இல்லை. மிகவும் மோசமான இருக்கிறது. ஊழலில் தி.மு.கவையே மிஞ்சி விட்டார்கள்.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

எதிர்க்கட்சியான திமுக இவற்றை தட்டிக்கேட்பது இல்லை. ஏனென்றால் ஓ.பி.எஸ்சும், இ.பி.எஸ்சும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மாதம் ரூ.10 லட்சத்துக்கு காண்டிராக்ட் ஒதுக்கி கொடுக்கிறார்கள். எதிர்கட்சியும் சரியில்லை. ஆளும் கட்சியும் சரியில்லை. இந்த ஊழல் பினாமி அரசு ஒரு நிமிடம் கூட நீடிக்க கூடாது என மக்கள் மனம் மாற வேண்டும். இந்த ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும். இவ்வாறு கூறினார்.