Advertisment

டெல்லி செல்வது ஏன்?- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி! 

Why go to Delhi? - O. Panneerselvam interview!

Advertisment

அ.தி.மு.க. பொதுக்குழு முடிந்துள்ள நிலையில் இன்று (23/06/2022) இரவு 08.45 மணியளவில் சென்னை விமானநிலையத்திலிருந்துவிமானம் மூலம் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார். அவருடன் தேனி தொகுதியின் மக்களவை உறுப்பினர்ரவீந்திரநாத்குமார், மனோஜ் பாண்டியன்,கோபாலகிருஷணன்உள்ளிட்டோரும் டெல்லி சென்றுள்ளனர்.

டெல்லி செல்லும் முன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்கிறேன். வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்க பா.ஜ.க. அழைப்பு விடுத்ததன் பேரில் டெல்லி செல்கிறேன்" என்றார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாஆகியோரைஓ.பன்னீர்செல்வம் சந்திக்கத்திட்டமிட்டிருப்பதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

Delhi admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe