Advertisment

''ஏன் கதவ திறக்கல...?''- மாற்றுத்திறனாளியை தாக்கிய காவலர்

publive-image

மாற்றுத்திறனாளி ஒருவரை காவலர் ரயிலில் வைத்து தாக்குவது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் திருவாரூரில் நடந்துள்ளது.

Advertisment

கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி மன்னார்குடியில் இருந்து எழும்பூர் நோக்கி சென்றமன்னைவிரைவு ரயில் திருவாரூர் ரயில் நிலையத்தில் நின்றது. அப்பொழுது மாற்றுத்திறனாளிகள் பயணிப்பதற்காக உள்ள பிரத்யேக பெட்டியில் ஏறிய காவலர் ஒருவர் பெட்டியின் கதவை தான் தட்டியும் திறக்கவில்லை என தெரிவித்து மாற்றுத்திறனாளி ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

Advertisment

தாக்குதல் தொடர்பாக ரயில்வே காவல்துறையில் புகார் அளித்து இதுவரை நடக்கவில்லை என கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்டவர் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் பழனி என்பது தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

attack Thiruvarur police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe