Advertisment

''ஏன் காலேஜ் வாசல்ல அநியாயம் பண்றீங்க...'' தட்டிக்கேட்ட மாணவியின் தந்தையைத் தாக்கிய போதை இளைஞர்கள்

மதுரையில் கல்லூரி மாணவிகளிடம் போதையில் தகராறுசெய்தஇளைஞர்களைத்தட்டிக் கேட்ட மாணவியின் தந்தையைப் போதை இளைஞர்கள் சரமாரியாகத்தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ளது மீனாட்சி அரசு கலைக் கல்லூரி. நேற்று மாலை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலிருந்து அமரர் ஊர்தி ஒன்று சென்றது. ஊர்தியின் முன்பாக சில இளைஞர்கள் மது போதையில் பைக்கில் அதிவேகத்துடன் ஒலி எழுப்பிக்கொண்டு இடையூறு செய்தவாறு சென்றனர். இதனைக் கண்ட கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். மேலும் அந்த இளைஞர்கள் கல்லூரி மாணவிகளைப் பார்த்துத்தகாத வார்த்தைகளால் கத்தியபடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்பொழுது கல்லூரி வாசலில் நின்று கொண்டிருந்த மாணவி ஒருவரின் தந்தை ''ஏன் இப்படி காலேஜ் வாசல்ல அநியாயம் பண்றீங்க'' எனத்தட்டிக் கேட்டுள்ளார். அப்பொழுது மது போதையில் இருந்த இளைஞர்கள் கும்பல் மாணவியின் தந்தையைத்தகாத வார்த்தைகளால்திட்டியதோடு, ஹெல்மெட்டைக் கொண்டு அவரைத்தாக்கியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மதுரையின் மையப் பகுதியாக இருக்கும் கோரிப்பாளையத்தில் இப்படி ஒரு சம்பவம் அதுவும் அரசுக் கல்லூரி வாசலில் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

youngsters Drugs college madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe