Advertisment

திமுக பதறுவது ஏன் ?- தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியில் கூட்டணி அமைப்போம் என மோடி கூறியுள்ளார், ஆனால் திமுகவை குறிப்பிட்டு கூட்டணிக்கு அழைக்கவில்லை பிறகு ஏன் திமுக பதறுகிறதுஎன பாஜக தமிழக தலைவர் தமிழை சவுந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார்.

Advertisment

tamilisai

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அண்மையில் கலைஞர் சிலை திறப்பு விழாவில் மோடியை சாடிஸ்ட் பிரதமர் என விமர்சித்திருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். அதனை அடுத்து நேற்று திருவாரூரில் நடைபெற்றகிராம சபை கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஸ்டாலின் சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கூறியிருந்தார்.

Advertisment

அதனை தொடர்ந்துதிமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக்குழு கூட்டத்தில் பங்கப்பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் பேசுகையில்,

திமுக பாஜகவின் நண்பர் என்பதை திமுகமறுக்கமுடியாது. கடந்த காலத்தில் பாஜக ஆட்சியில் அவர்கள் இருந்தார்கள் என்பதை மறுக்க முடியாது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியில் கூட்டணி அமைப்போம் என மோடி கூறியுள்ளார், ஆனால் திமுகவை குறிப்பிட்டு கூட்டணிக்கு அழைக்கவில்லை. மோடிதொண்டர் ஒருவரின் கேள்விக்கு நாகரீகமான முறையில் பதிலளித்துள்ளார். ஆனால் ஸ்டாலினுக்கு அந்த நாகரீகம் இல்லையோ என்பது எனது கருத்து.

நாங்கள் யாருடன் கூட்டணி வைப்பது என்று எங்களுக்கு தெரியும். ஒத்த கருத்துடையவர்களிடம்தான் கூட்டணி. ஆனால் திமுக என்னவோ அவர்களை கூட்டணிக்கு அழைத்ததுபோல பதறுவது ஏன்?. நீங்கள்தான் ராகுலை பிரதமராக முன்மொழிந்து முற்று புள்ளி வைத்துவிட்டீர்களே. பிறகு ஏன் பாஜக தங்களை கூட்டணிக்கு அழைக்கிறதோ என நினைக்கிறார்கள்என்றார்.

modi stalin Tamilisai Soundararajan
இதையும் படியுங்கள்
Subscribe