Advertisment

"தி.மு.க. எம்.பி.க்கள் எய்ம்ஸ் குறித்து குரல் கொடுக்காதது ஏன்?"- எடப்பாடி பழனிசாமி கேள்வி! 

publive-image

சேலம் மாவட்டம், ஓமலூரில் இன்று (08/10/2022) நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துக் கொண்டார்.

Advertisment

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் குரல் எழுப்பாதது ஏன்? தமிழகத்தின் நலனுக்காக அ.தி.மு.க. உறுப்பினர்கள் தான் நாடாளுமன்றத்தையே ஒத்திவைக்கும் அளவுக்கு குரல் கொடுத்துள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். அ.தி.மு.க. உறுப்பினரே இல்லாத ஒருவர் பல கட்சிகளுக்கு போய் வந்த வேடந்தாங்கல் பறவை போன்ற நபர் அ.தி.மு.க.வைப் பற்றி பேசத் தகுதியில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

pressmeet admk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe