Advertisment

“இதனால்தான் சசிகலாவுக்கு கார் கொடுத்தேன்” - நீக்கப்பட்ட அதிமுக நிர்வாகி பதில்! 

Sasikala

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையானதையடுத்து நேற்று (08.02.2021) பெங்களூருவில் இருந்து புறப்பட்ட நிலையில், சசிகலாஇன்று காலை சென்னை தி.நகரில் உள்ள இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். நேற்று சசிகலாஅதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில்பயணத்தைதொடங்கியநிலையில், அதிமுககொடியைசசிகலா பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனதமிழக காவல்துறைதெரிவித்திருந்தது.இதற்காக தமிழக எல்லையில் போலீசார்சார்பில் சசிகலாவுக்கு நோட்டீஸும்கொடுக்கப்பட்டது. இதனால் தமிழக எல்லையான ஜூஜூவாடியில்சசிகலா பயணிக்க அதிமுக உறுப்பினர் ஒருவர் தன்னுடையகாரை(அதிமுககொடிபொருத்தப்பட்டகார்)கொடுத்திருந்தார். இதனையடுத்து சசிகலாவுக்கு கார்கொடுத்தநிர்வாகி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

Advertisment

admk

இதனிடையே சசிகலாவுக்கு கார் கொடுத்ததுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தசூளகிரிஅதிமுக ஒன்றியச் செயலாளர் சம்மங்கி,அதிமுகதொண்டரின் காரில் தமிழகம் திரும்ப வேண்டும் எனசசிகலா விருப்பப்பட்டதால் காரைக் கொடுத்தாக தெரிவித்தார்.

Advertisment

''சசிகலாவுக்கு அதிமுகசார்பில் வரவேற்பு கொடுத்தோம். அப்பொழுது அவரது கார் பழுதானது.அதிமுகதொண்டர் ஒருவரின் காரில் பயணிக்க வேண்டும் எனவிருப்பம் தெரிவித்தார். அதனால்என் காரைக் கொடுத்தேன். தலைமை என்ன முடிவெடுத்தாலும் சரிங்க, சசிகலாவுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என முடிவு பண்ணிருக்கோம்'' என்றார்.

car admk sasikala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe