மத்திய பாஜக அரசால் பத்திரிகை சுதந்திரம் அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக பத்திரிகை சுதந்திர தினமான இன்று (மே 3) இதுகுறித்து 'எக்ஸ்' வலைத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், 'உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா 151 வது இடத்திற்கு சரிந்துள்ளது. ஏன்? ஏனெனில் பாஜக ஆட்சி கேள்விகளுக்கு அஞ்சுகிறது. அது செய்தி அறைகளை சோதனை செய்கிறது. செய்தியாளர்களை சிறையில் அடைக்கிறது. ஊழல், உரிமை மீறல்கள் மற்றும் அதன் பெரும்பான்மை நிகழ்ச்சி நிரலை அம்பலப்படுத்துபவர்களின் வாயை அடைக்கிறது.
இந்த உலக பத்திரிகை சுதந்திர தினத்தில், நம்மை நாமே நினைவுபடுத்திக் கொள்வோம்: யாருக்கும் அஞ்சாத ஊடகவியல் இல்லையென்றால் ஜனநாயகம் இருளில் மாண்டுவிடும். அதனால்தான் நாம் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும்.ஊடகங்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரத்திற்கு உண்மையைத் தெரிந்துகொள்ள, கேள்வி கேட்க மற்றும் பேசுவதற்கான உரிமைக்காக பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் ' என தெரிவித்துள்ளார்.