Skip to main content

கடலூர் கல்லூரி மாணவியை கொலை செய்தது ஏன்? கைது செய்யப்பட்ட ஆகாஷ் வாக்குமூலம்

Published on 10/05/2019 | Edited on 12/05/2019

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அம்மன் கோவில் தெருவைத் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரின் மகள் திலகா (19).  இவர் விருத்தாசலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.  இவர் கடந்த 8 ஆம் தேதி மாலை தனது வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டினுள் புகுந்த மர்ம நபர் வயிற்றுப் பகுதி மற்றும் கைகளில் கத்தியால் குத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளார். 

 

 Why did Cuddalocure college girl kill..  Akash confession

 

உயிருக்கு போராடிய நிலையில் இருந்த திலகா, தனது மாமா மகேந்திரனுக்கு போன் செய்து கத்தியால் குத்தப்பட்டதை கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த அப்பெண்னின் மாமா மற்றும் அவரது பெற்றோர் திலகாவை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

 

 Why did Cuddalocure college girl kill..  Akash confession

 

இதுகுறித்து வழக்குப் பதிந்த கருவேப்பிலங்குறிச்சி பேரளையூரை சேர்ந்த அன்பழகன் மகன் ஆகாஷ்(19) எனும் இளைஞரை கைது செய்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் போதே திலாகவும் ஆகாஷும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் நண்பர்களாக பழகியுள்ளனர். பள்ளி படிப்பு முடிந்து திலகா தேர்ச்சி பெற்று தனியார் கல்லூரியில் சேர்ந்து படித்துவந்தார். ஆனால் ஆகாஷோ நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு ஊதாரித்தனமாக சுற்றிவந்துள்ளான். இதனால் திலகா ஆகாஷிடம் ஊதாரித்தனமாக சுத்தாதே படி என அறிவுரை கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் காதலிப்பதாக ஆகாஷ் கூறியுள்ளான்.

 

 Why did Cuddalocure college girl kill..  Akash confession

 

தொலைபேசியிலும், வாட்ஸ்அப்பிலும் பேசி வந்துள்ளான். திலகாவின் பேச்சை கேட்காமல் ஆகாஷ் மேலும் ஊதாரித்தனமாக சுற்றியதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வாட்ஸ் அப்பில் ஆகாஷின் எண்ணை தடை செய்துள்ளார் திலகா. தன்னை பிடிக்கவில்லை என தவிர்த்து விட்டதாக ஆத்திரம் அடைந்த ஆகாஷ் திலகவதியின் அழைப்பின் பேரில் அவரது வீட்டிற்கு சென்று இதுகுறித்து பேசும்பொழுது நடந்த வாக்குவாதத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் திலகாவை வயிறு, கை ஆகிய இடங்களில் குத்திவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் கதவை தாழிட்டுவிட்டு வந்ததாகவும், கொலை செய்ய உபயோகித்த கத்தியை வீட்டின் கொல்லைப்புறத்தில் தூக்கி எறிந்ததாகவும் ஆகாஷ் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.     

 

 Why did Cuddalocure college girl kill..  Akash confession Why did Cuddalore college girl kill..  Akash confession

 

இந்த விசாரணையில் தான்தான் கொலை செய்ததாக ஆகாஷ் ஒத்துக்கொண்டான். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷை தங்களிடம் ஒப்படைக்க கோரி ஆத்திரத்துடன் பெண்ணின் உறவினர்கள் கடலூர் கருவேப்பில்லைங்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

 

 Why did Cuddalocure college girl kill..  Akash confession

 

 

 Why did Cuddalocure college girl kill..  Akash confession

 

இந்த போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் சாலைமறியலை கைவிட்டு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதன்பின் அவர்களுடன் காவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுடிருக்கிறார்கள்.

 

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.