Chennai

Advertisment

சென்னை ஆதம்பாக்கம் தில்லைநகர் 4வது தெருவில் தனியாக ஒரு வீட்டில் முழு தளத்தையும் வாடகைக்கு எடுத்து அதில் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது. இந்த விடுதியை திருச்சியைச் சேர்ந்த சஞ்சீவ் என்பவர் நடத்தி வந்தார். பராமரிப்பு பணி இருப்பதாக கூறி அடிக்கடி சஞ்சீவ் விடுதிக்குள் செல்வார். இதையடுத்து அவர் இதுபோல் வருவதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா என்பதை கண்டறிய அங்கு தங்கியுள்ள பெண்கள் முற்பட்டனர். அதேபோல் அவர்கள் குளியல் அறைகள், படுக்கை அறைகளை ஆய்வு செய்ததில் 16 கேமராக்கள் இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை விடுதியின் உரிமையாளர் சஞ்சீவ்தான் பொறுத்தியிருக்கிறார் என்பதை உறுதி செய்த அந்த பெண்கள், ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை பெற்ற போலீசார் சஞ்சீவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணையில் சஞ்சீவ் தெரிவித்த தகவலை சில போலீசார் தெரிவித்துள்ளனர். சஞ்சீவ் ரியல் எஸ்டேட், ஓட்டல் என பல தொழில் நடத்தி வந்துள்ளார். பெண்கள் விஷயத்தில் பலவீனமான அவர் பெங்களூரு, மும்பை போன்ற இடங்களுக்கு சென்று உல்லாசத்துக்காக லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்துள்ளார். பெண்கள் விஷயத்தில் பணத்தை இழந்ததால் கடன் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Advertisment

ஓட்டல், ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வேறு என்ன தொழில் செய்யலாம் என்று நண்பர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அப்போது செல்போனில் ஆபாச இணையதளங்களை பார்த்துள்ளார். இதனை பார்த்த அவருடைய நண்பர்கள் நேரடியாக பார்க்க வேண்டுமானால் பெண்கள் விடுதி நடத்தலாம், அதோடு அதில் மாத வருமானம் நன்றாக வரும் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து அவர் சென்னை ஆதம்பாக்கத்தில் அனுமதியில்லாமல் பெண்கள் விடுதி நடத்த துவங்கினார். அங்கு குளியல் அறைகள் மற்றும் படுக்கை அறைகளில் கேமராக்களை பொறுத்தியுள்ளார்.

hidden-camera

Advertisment

விடுதியில் தங்கியுள்ள பெண்கள் காலையில் 9 மணிக்கு வேலைக்கு சென்றுவிடுவார்கள். பின்னர் மாலை 5 மணிக்கு மேல்தான் வருவார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் சஞ்சீவ் விடுதிக்கு வந்து, தனது அறைக்கு சென்று கேமராவில் பதிவானவற்றை பதிவிறக்கம் செல்வார். பின்னர் இரவு 8 மணிக்கு வந்து அந்த வீடியோக்களை பார்த்து மகிழ்வார். இரவு 11 மணி வரை அதனை பார்த்துவிட்டு தனது செல்போனில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு செல்வார். வீட்டில் பெண்கள் குளியல் அறைகளில் குளிப்பதையும், படுக்கை அறைகளில் உடை மாற்றுவதையும் கண்டு விடிய விடிய ரசித்துள்ளார். பெண்கள் மீதான மோகத்தில் இருந்து விடுபட முடியாமல்தான் இந்த விடுதியை தொடங்கியதாக கூறி போலீசாரிடம் அழுதுள்ளார்.