Advertisment

காதலன் காந்தியிடம் இருந்து விலகியது  ஏன்?  நிலானி பரபரப்பு விளக்கம்

nilani

காதலன் காந்திலலித்குமார் தற்கொலைக்கு தான் காரணமில்லை என்றும், அவருடமிருந்து விலகியது குறித்தும், காந்தியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரவுவதை தடுக்க வேண்டும் என்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை நிலானி புகார் அளித்துள்ளார்.

Advertisment

தென்றல், தாமரை, பிரியமானவள் போன்ற சின்னத்திரை தொடர்களிலும், காதலும் கடந்து போகும், தெரு நாய்கள், நெருப்புடா ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளவர் நடிகை நிலானி. இவரது காதலர் காந்தி லலித்குமார். உதவி இயக்குநரான இவர் திருவண்ணாமலையைச்சேர்ந்தவர்.

Advertisment

ni

காதலியான நிலானி தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக கூறி, நிலானி நடித்துக்கொண்டிருந்த படப்பிடிப்பு தளத்திற்கே சென்று அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது படப்பிடிப்பில் இருந்தவர்கள், காந்தி லலித்குமாரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து நிலானி, மயிலாப்பூர் காவல்நிலையத்தில், காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தகராறு செய்வதாக புகார் அளித்துள்ளார். நிலானி அளித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் காந்தி லலித்குமார் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

nakai

இந்த சூழ்நிலையில், காந்தி லலித்குமார் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் நிலானியுடன் இருந்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டிருந்தார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது. காந்தியின் தற்கொலைக்கு நிலானிதான் காரணம் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதனால் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நிலானி புகார் செய்தார். அந்த புகார் மனுவில், ‘’காந்தி லலித்குமார் என் காதலர். அவர் தற்கொலைக்கு நான் காரணமில்லை. நான் அவரை திருமணம் செய்ய நினைத்திருந்தேன். ஆனால் அவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி என்னிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டிருந்தார். தொடர்ந்து என்னிடம் பணத்தை வாங்கி ஏமாற்றியதால் அவரிடம் இருந்து விலகினேன்.

நானும் காந்தியும் சேர்ந்திருப்பதுபோல் உள்ள படங்களை வேண்டுமென்றே சமூக வலைத்தளங்களில் பரப்புகின்றனர். சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறியுள்ளார்.

ganthi lalithkumar nilani
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe