
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த முறை திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சிக்கே அந்த தொகுதியை ஒதுக்கியிருந்த நிலையில், இம்முறையும் காங்கிரஸ் கட்சி சார்பாக மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையும் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து நேரடியாகவே அதிமுக களமிறங்கவுள்ள நிலையில் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இந்நிலையில் தற்பொழுதுசென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையில் வெல்ல மண்டி நடராஜன், வைத்தியலிங்கம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
Follow Us