Skip to main content

'யார் மிரட்டினாலும் எங்களுக்கு தெரிவியுங்கள்' - வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

nn

 

புதிய கட்டடங்களைக் கட்டுவதற்கு வார்டு உறுப்பினர் பெயரில் மக்களிடம் லஞ்சம் கேட்கப்படுவதாக கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

 

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''கோவையை எடுத்துக் கொண்டால் குடிதண்ணீர் ஒரு வாரமாக வரவில்லை என்று சிவானந்தா காலனி பகுதியில் பொதுமக்கள் மிகப்பெரிய பிரச்சினையோடு வந்தார்கள். அங்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த பொழுது சாக்கடை அடைப்புகள் எல்லாம் வருடக்கணக்காக எடுத்து விடாமல் இருக்கிறது. குப்பையை தூர் வாருவதற்காக மாநகராட்சி அதிகாரிகளிடம் சொன்னால் அவர்கள் தூய்மை செய்தாலும் கூட அந்த பகுதியில் இருக்கக்கூடிய மாமன்ற உறுப்பினர்கள் அவர்களை மிரட்டுவதாக நாங்கள் அறிகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு வீட்டில் அவர்களுடைய காம்பவுண்டுக்குள் ஒரு போர் போடுவதாக இருந்தால் கூட இவ்வளவு பணம் வேண்டும் என வசூல் செய்வதாகத் தெரிகிறது.

 

வீடு கட்டுகின்றபோது வீட்டின் பணிகள் துவங்கி விட்டால் அதற்கு என்று தனியாக ஒரு அமவுண்ட் வசூல் செய்கிறார்கள். கோவை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட இந்த பகுதிகளில் பொதுமக்களுடைய நலனுக்காக இம்மாதிரி யார் வந்து அவர்களிடம் லஞ்சமாக பணம் கேட்டாலும், அவர்கள் செய்கின்ற வீட்டு பராமரிப்பு பணிகள், புதிய கட்டடங்கள், புதிய போர்வெல்கள் போடும் பொழுது யார் தொந்தரவு செய்தாலும் அவர்களுக்கு உதவி செய்வதற்காக தனியாக ஒரு ஹெல்ப் லைன் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன். இந்த உதவி எண் என்பது இன்னும் இரண்டு நாட்களுக்குள்ளாக மக்களுக்கு அறிவிக்கப்படும். யார் இந்த மாதிரி பணம் கேட்டு மிரட்டினாலும் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு எங்களிடம் தெரிவிக்கலாம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மாநகராட்சி குடிநீர் குழாயில் எலும்புத்துண்டு, இறைச்சி கழிவு; ஆய்வில் ஷாக்

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
A piece of bone, meat waste in the municipal drinking water pipe; Shock in the study

குடிநீர் விநியோகம் செய்யும் குழாயிலிருந்து எலும்புத் துண்டுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் வெளியானது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

கோவை மேட்டுப்பாளையம் 21வது வார்டு கொண்டையூர் பகுதி குடியிருப்பில் மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஒரு வாரமாகவே தண்ணீர் துர்நாற்றத்துடன் வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்திருந்தனர். எதனால் குடிநீரில் துர்நாற்றம் வருகிறது என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் அப்பகுதிக்கு தண்ணீர் விநியோகிக்க கட்டப்பட்ட தொட்டியில் இருந்து கீழே வரும் குடிநீர் குழாய்களை குழி தோண்டி மாநகராட்சி அதிகாரிகள் பார்த்த பொழுது அதில் எலும்பு துண்டுகளும் இறைச்சி கழிவுகளும் வந்தது அதிர்ச்சியைக் கொடுத்தது.

ஒருவேளை குடிநீர் தொட்டியில் பறவை ஏதேனும் விழுந்து உயிரிழந்து அதன் எலும்புகள், இறைச்சி கழிவுகள் குழாயில் வெளியேறியதா? அல்லது வேறு ஏதேனும் நிகழ்ந்ததா என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். மாநகராட்சி குடிநீர் விநியோகத்தில் எலும்புகள் மற்றும் இறைச்சி கழிவுகள் வந்தது 21வது வார்டு கொண்டையூர் பகுதி மக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

'என்னை கங்கை மாதா தத்தெடுத்துள்ளார்'- மோடி பேச்சு

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
mn

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி தொடரும் நிலையில் இந்தியாவின் ஜனநாயக மதிப்பு மக்களவைத் தேர்தலும் நிரூபணம் ஆகி விட்டதாக பிரதமர் மோடி பேசி உள்ளார். மேலும் கங்கை மாதா தன்னை தத்தெடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்பு முதன்முறையாக பிரதமர் மோடி வாரணாசிக்கு சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற 'பிஎம் கிசான் சமேலன்' என்கின்ற விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் நிதி உதவி செலுத்தும் திட்டத்தின் 17 வது தவணையாக 20000 கோடி ரூபாயை விடுவித்திருக்கிறார். இதில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது மேடையில் பேசிய பிரதமர் மோடி, ''மூன்றாவது முறையாக ஒரு அரசு அமைவது என்பது அபூர்வமான ஒரு செயல் மூன்றாவது முறையாக தான் பிரதமராக வேண்டும் என நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி. காசி வாழ் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரை மட்டுமல்லாமல் நாட்டின் பிரதமரையும் தேர்வு செய்துள்ளனர்.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. மூன்றாவது முறையாக நானே பிரதமராக வரவேண்டும் என்பதற்காக நம்பிக்கை வைத்து வாக்களித்த அத்தனை வாக்காளர்களுக்கும் எனது நன்றி. இந்த தொகுதி வெறும் நாடாளுமன்ற உறுப்பினரை மட்டும் தேர்ந்தெடுக்க வில்லை மாறாக நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுத்திருக்கிறது. அதற்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வலுவான அரசாக பாஜக அரசு அமைந்திருக்கிறது. அதன் காரணமாக ஏழைகள் மற்றும் விவசாயிகள் சார்ந்த நலத்திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்படும். மூன்றாவது முறையாக என்னை கங்கை மாதா தத்தெடுத்துள்ளார்''  என நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார்.