Skip to main content

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? - நாளை தேர்தல்... தயார்நிலையில் நிர்வாகிகள்!

Published on 16/10/2022 | Edited on 16/10/2022

 

ரதக

 

கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால் அப்போதைய கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகினார். இதன் பின் சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்றார். முழு நேரத் தலைவரை தேர்ந்தெடுக்க முதலில் செப்டம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டு தற்போது அக்டோபர் 17ல் கட்சித் தேர்தல் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 

இதனையடுத்து தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு பெறப்பட்டது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சசிதரூர் மற்றும் கார்கே வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தனர். நாளை நடைபெற உள்ள காங்கிரஸின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் சசி தரூர் ஆகிய இருவரும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. நாளை காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள். 


 

சார்ந்த செய்திகள்