Skip to main content

'யார்...? யார்...?' கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் குறித்து கேள்விகளை அடுக்கிய நீதிமன்றம்!

Published on 18/07/2022 | Edited on 18/07/2022

 

'Who...? Who...? Who...?- The court raised questions about the Kallakurichi violence incident!

 

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் முன்பு நேற்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் தனியார் பள்ளியின் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டது. அதேபோல் காவல்துறை வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. பல மணி நேரம் போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை எனவும், தற்போது நடைபெற்றுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்களில் தெளிவு இல்லை என்பதால் இரண்டாவது முறை மாணவியின் உடலை உடற்கூறாய்வு செய்ய வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

இந்த சம்பவத்தில் இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 108 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கின்றனர். கள்ளக்குறிச்சி சிறார் சிறப்பு நீதிமன்றம், கள்ளக்குறிச்சி 2 ஆம் எண் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். 

 

highcourt chennai

 

மறுபுறம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை தொடங்கியது. அதில் மாணவர்களின் டி.சி யை எரித்தது யார்? யார் இதற்கான உரிமையை கொடுத்தது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வன்முறை திடீர் கோபத்தால் ஏற்பட்ட வன்முறை போல் தெரியவில்லை, திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் தெரிகிறது. இந்த வன்முறையின் பின்னணியில் இருப்பது யார்? நீதிமன்றத்தை நாடிவிட்டு ஏன் போராட்டதை கையில் எடுத்தீர்கள் என கேள்வி எழுப்பினர். காவல்துறையினர் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை. சட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அப்பொழுது மனுதாரர் (ராமலிங்கம்) தரப்பில் வன்முறைக்கும் பெற்றோருக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து, 'உளவுத்துறை அறிக்கை என்ன சொல்கிறது? இந்த சம்பவத்திற்கு சிலர் மட்டுமே காரணமல்ல. வன்முறை சம்பவத்தை பொறுத்தவரை விசாரணையை நீதிமன்றமே கண்காணிக்கும்' என தெரிவித்து மாணவியின் உடலை வீடியோ பதிவுடன் மறு கூறாய்வு செய்ய நீதிமன்றம் செய்ய அனுமதி அளித்தது. மேலும் உடற்கூராய்வின் பொழுது மாணவியின் தந்தை உடனிருக்கவும் அனுமதி வழங்கியது நீதிமன்றம். அதேநேரம் வன்முறையாளர்களை கண்டறிந்து பள்ளியில் ஏற்பட்ட இழப்பை அவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்