கலைஞர் இறந்த துக்கம் தாங்காமல் திமுக விசுவாசி தூக்குப்போட்டு இறந்தசம்பவம் நடந்துள்ளது.
கோவை அருகே உள்ள ஒக்கிலிப்பாளையம் குப்பாண்ட கவுண்டர் தெரு பகுதியில் வசிப்பவர் நடராஜன் அவருடைய மகன் மணி வயது 52 சைக்கிள் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச்சடங்கைடிவியில்பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென்று அழுது கொண்டு ரூமை தாழிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை உறவினர்கள் பார்த்து செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாகபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/54405089-f791-4703-9745-4f8b4eb159bf.jpg)
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அதேபோல் நீலகிரி கோத்தகிரி கட்டபெட்டுவில் கருப்பையா என்கிற திமுக தொண்டர்கலைஞரின் இறப்பு செய்தியை தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்...அவருக்கு மனைவியும். இரண்டு மகன்களும் உள்ளனர். கருப்பையா தன்னை கலைஞர் பித்தன் என்றெ தன்னை அழைக்கவேண்டும் வேண்டும் என சொல்வாராம். அப்படி கூப்பிடாவிட்டால் பிறரிடம் கடிந்து கொள்வாராம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)