கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவமனையின் அருகேயுள்ள தண்ணீர் தொட்டி அருகே பிறந்த குழந்தை அழுகுரல் அதிகாலை கேட்டுள்ளது. அப்போது அங்கிருந்தவர்கள் தேடியபோது அருகில் இருந்த பையில் சத்தம் கேட்டுள்ளது. உடனே பையில் இருந்த குழந்தையை எடுத்து மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
குழந்தையை பாதுகாப்பாக அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீட்டு கண்ணாடி பெட்டியில் வைத்துள்ளனர். பின்னர் இந்த குழந்தை தமிழக அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிதம்பரம் நகர காவல்துறை இந்த குழந்தை தவறான உறவில் பிறந்துள்ளதா? பெண் குழந்தை என்று இப்படி விட்டு சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் எங்கே என்று விசாரணை செய்து வருகின்றனர்.