ops

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பலர் அதிமுகவில் இணையும் விழா வியாழக்கிழமை சென்னையில் நடைப்பெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்த விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,

இடைப்பட்ட காலத்தில் பிரிந்து சென்ற ஜெயலலிதாவின் தொண்டர்கள் மீண்டும் வந்து சேர வேண்டும் என்று நாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று வந்துகொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் திமுக, மதிமுக உள்ளிட்ட வேறு கட்சிகளில் இருந்தும் இந்த கட்சிக்கு வந்துள்ளார்கள்.

Advertisment

ஆனால் உங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர், தான் இருந்த இடம் எது? போய்ச் சேர்ந்த இடம் எது? வந்து சேர வேண்டிய இடம் எது? என்ற தெளிவு இல்லாமல் அண்மையில் திமுகவில் ஐக்கியமாகி இருக்கிறார். அவர் பெயரை இங்கே சொல்ல நான் விரும்பவில்லை. அந்த துரோகி யார் என்று உங்களுக்கே நன்றாக தெரியும். திசை மாறிய பறவையாக அந்த துரோகி சென்று விட்டார். கட்சியில் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்ற உறுதியினைச் சொல்லி எதிர்வரும் தேர்தல் எதுவாயினும் அதில் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்றார்.