/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/muttaih43.jpg)
முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா (வயது 77) உடல்நலக்குறைவுக் காரணமாக, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
சேடப்பட்டி முத்தையா பற்றி...
கடந்த 1991- ஆம் ஆண்டு முதல் 1995- ஆம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக பதவி வகித்தவர் சேடப்பட்டி முத்தையா. 1977, 1980, 1984, 1991 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சேடப்பட்டி முத்தையா, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர், 2006- ஆம் ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்து அக்கட்சியில் தேர்தல் பணிக்குழுத் தலைவராகப் பணியாற்றி வந்தார்.
சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது ஆழந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)