Advertisment

உயிருக்கு பயந்து வீடுகளில் ஒளிந்த 30 போலிசாரை காப்பாற்றியது யார்? ஆவேசமாக கேட்கும் ராஜேஸ்வரி

po p[

மக்கள் திரள் போராட்டம் நடக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று கலந்து கொள்வது சமூக செயற்பாட்டாளர்களின் பங்கு.. அப்படித்தான் தோழர் ராஜேஸ்வரியும் 22 ந் தேதி காலை தூத்துக்குடி சென்றுள்ளார். அவர் கண்ட காட்சிகளை நம்மிடம் விவரித்தார்..

Advertisment

நான்., திருநெல்வேலியில் தங்கியிருந்து அன்று காலை 11 மணிக்கு தூத்துக்குடி போன போது ஆட்சியர் அலுவலகம் கடந்து பாலம் அருகே போராட்ட மக்களை மறித்தார்கள் நானும் அந்த இடத்தில் இறங்கினேன். அந்த மக்களை ஆட்சியர் அலுவலகம் போக வேண்டாம் என்று ஒரு மைதானம் நோக்கி திருப்பினார்கள். ஆனால் மக்கள் திரும்பல. ஆனால் அதற்கு முன்பே பல கிராம மக்கள் வந்த வாகனங்களை ஒரு மைதானம் நோக்கி திருப்பி விட்டிருந்தது தெரிந்தது.

Advertisment

அங்கிருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி மக்களோடு போனேன். அங்கே முன்னதாகவே ஆட்சியர் அலுவலக மாடியிலும் மரங்களுக்கு பின்னாலும் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டததை அறிந்தோம். அதாவது மக்கள் ஆட்சியர் அலுவலகம் போகும் முன்பே காவலர்கள் சிசிடிவி கேமராவை இயங்காமல் செய்துவிட்டு அங்கே தயாராக இருந்திருக்கிறார்கள். கல், கட்டை, லத்தி அடியில் மக்கள் சிதறினார்கள். என்னுடன் வந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு தூக்கும் போதும் மறுபடியும் அடி விழுந்தது. மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு மறுபடியும் பாலம் அருகே வந்தோம்.

போலிசார் கட்டை, கல்லை எடுத்து தயாராக நின்று தாக்கினார்கள். அங்கு வந்த மக்கள் திரள் பலரை காப்பாற்றியது.

அங்கிருந்து திருநெல்வேலி சாலையில் ஒரு வீட்டில் அடைக்கலம் புகுந்தோம்.. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் காவல்துறை தடியடி நடத்தி மக்களை விரட்டியடித்த போது எங்களுக்கு அடைக்கலம் கொடுத்த இரண்டு வீட்டிற்குள்ளும் போலீஸ்காரனுங்க கையெடுத்து கும்பிட்டு அடைக்கலம் கேட்டதால் கிட்டத்தட்ட 30 பேலீஸ்காரங்களுக்கு அந்த மக்கள் அடைக்கலம் கொடுத்து, பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் அராஜகத்திற்கு பதிலடி கொடுத்திருப்பாங்க தானே???

நான் அவர்களிடம் இவர்களை ஏன் இங்கு தங்க வச்சீங்கன்னு கேட்டதற்கு, கையெடுத்து கும்பிட்டு கெஞ்சுனாங்க அதான் தங்க வச்சேன்னு அந்த வீட்டுக்காரங்க சொன்னாங்க, அவர்கள் திருச்சி, திருநெல்வேலியில் இருந்து வரவழைக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு எதுவும் தெரியாதுன்னு கெஞ்சுனாங்க அதான் அடைக்கலம் கொடுத்தேன்னு சொன்னாங்க...

அவர்களை அந்த மக்கள் உடம்பில் ஒரு கீறல் இல்லாமல் பாதுகாப்பாக அனுப்பிருக்காங்க, ஆனால் அங்க எங்க மக்களை மனிதாபிமானமில்லாமல் அடிச்சு கொல்றீங்களே மனசாட்சின்னு ஒன்னு இருக்கா? உங்களுக்கும் சேர்த்து தான் அவர்கள் உயிரை விட்டிருக்காங்கன்னு நாங்க சொன்னோம்...

அதில் மூன்று பேர் எங்களுக்கு போலீஸ் வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம், வேலையை விட்டுவிடப் போறோம் எங்களுக்கு எங்கள் உசுரு தான் முக்கியம்ன்னு சொன்னாங்க...

அதெப்படி உங்க உசுர காப்பாத்திக்க 15 அடி சுவரில் ஏறி குதிச்சு வீட்டுக்குள் ஓடி ஒளிஞ்சீங்க? சுவர் ஏறி குதிச்ச போது உங்களுக்கு அந்த வீட்டுக்காரங்க எல்லோரும் கை கொடுத்து இறக்கி விட்டாங்களே... இதுதான் எங்க மக்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம்... என்று சொன்ன போது தலைகுனிந்தார்கள் அந்த காவலர்கள். பிறகு போலிஸ் வந்த போது அடைக்கலம் கொடுத்த தம்பதிகளை படம் எடுத்துக் கொண்டு எங்களை காத்த தெய்வம் இவர்கள் என்று சொல்லி சென்றார்கள் என்றார் படபடப்போடு.

policemen Rajeswari
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe