ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா புகாரில் குற்றவாளி யார் எனக் கண்டுபிடிக்க முடியவில்லையா என உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் அளித்த புகாரில் அமைச்சர்விஜயபாஸ்கர் பெயர் இருந்தும் எஃப்.ஐ.ஆர்.-இல் ஏன் சேர்க்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். புகாரில் விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூவரின் பெயர் இருந்தும் பெயரிடப்படாத எஃப்.ஐ.ஆர். ஆக உள்ளதே ஏன்? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்றம் இதுகுறித்து தேர்தல் ஆணையம், தமிழக அரசு, வருமான வரித்துறை ஆகியவை பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே. நகர் குற்றவாளி யார் என கண்டுபிடிக்க முடியவில்லையா???
Advertisment