Advertisment

கரூர் பெண் தாசில்தார் இடைநீக்கத்திற்கு யார் காரணம் ?

கரூர் தாந்தோணிமலை பகுதியில் கலெக்டர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு அருகே தனியாருக்கு சொந்தமான 5.75 ஏக்கர் நிலத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் அரசு கையகப்படுத்தியது. இதற்காக நில உரிமையாளருக்கு ரூ.5.14 கோடி இழப்பீடு அரசு வழங்கியது. இந்நிலையில் அந்த நிலத்திற்கு தனியார் நிறுவனத்திற்கு பட்டா வழங்கப்பட்டது. இது குறித்து நீதிமன்றத்தன் மூலம் கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து விசாரித்த கலெக்டர் அரசு இழப்பீடு கொடுத்து பெற்ற நிலத்திற்கு பட்டா வழங்கியிருப்பதை அறிந்தார்.

Advertisment

 Who is responsible for the suspension of Karur girl Dasildar?

இதையடுத்து பட்டா ஆவணத்தில் கையெழுத்திட்ட தாசில்தார் அமுதா, மாவட்ட தலைமை நில அளவையர் சாகுல்ஹமீது, நில அளவையர் சித்ரா ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து இன்று உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவை தாசில்தார் அமுதா வாங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

Advertisment

காரணம் அவர் இங்கு பணியில் சேர்ந்து 2 மாதம் தான் ஆகிறது. இதனால் பட்டா வழங்கப்பட்ட நிலம் குறித்த ஆவணங்கள் பற்றி அவருக்கு தெரியவில்லை என்றும், தாலுகா அலுவலக அதிகாரிகள் கூறியதன் அடிப்படையில் அவர் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. இதனால் கீழ் மட்ட அதிகாரிகள் இதில் ஏதோ உள்ளடி வேலைகள் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் தாசில்தார் அமுதாவை சிக்க வைத்துள்ளனர். இவ்விவகாரம் தற்போது பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியிருக்கிறது. இதைத்தொடர்ந்து கரூர் தாசில்தார் அலுவலகத்தில் புதிய தாசில்தாராக அருள் என்பவர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.

dhasildar karur transferred
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe