சென்னை மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் பிரியா ராஜன் யார்?- விரிவான தகவல்!

Who is Priya Rajan to be elected Mayor of Chennai? - Detailed information!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தமிழகத்தின் பெரிய மாநகராட்சியான சென்னை மாநகராட்சியின் மேயராக பிரியா ராஜன் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

200 வார்டுகளைக் கொண்ட பெருநகர சென்னை மாநகராட்சியில் மேயர் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வடசென்னை பகுதியான திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 74- ல் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரியா ராஜன், பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

28 வயதான பிரியா ராஜன் எம்.காம் பட்டப்படிப்பை முடித்துள்ளார். மறைந்த முன்னாள் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவத்தின் பேத்தி ஆவர்.

இதற்கு முன் பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் ஆகியோர் தென் சென்னையில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டனர். தி.மு.க சார்பாகவடசென்னை பகுதியில் இருந்து மேயர் பதவியை யாரும் வகித்ததில்லை என்ற குறையைப் போக்கும் வகையில், வடசென்னையைச் சேர்ந்த பிரியா ராஜன் மேயராகப் பதவியேற்க உள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயராக பட்டியலின பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை மேயராக, தென் சென்னை பகுதியைச் சேர்ந்த தி.மு.க.வின் மு.மகேஷ் குமார் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

இதையும் படியுங்கள்
Subscribe