தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் தொடங்கியது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் மோகனின் வாக்கு அவர் வருவதற்கு முன்பே செலுத்தப்பட்டிருந்தது. அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நாசரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பிய பொழுது பெயர்குழப்பத்தில் இப்படி நடந்திருக்கலாம் என கூறினார்.