annamalai university

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் யார் என்ற கேள்வியுடனும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நியமிக்கப்பட்டது போல் வெளி மாநிலத்த்தை சார்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் அல்லது அவர்களின் ஆசிபெற்றவர்கள் நியமிக்கபடவுள்ளதாக ஊழியர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அண்ணாமலைப்பல்கலைக்கழகம் கடந்த 1929-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் கல்வியில் உலகளவில் பல்வேறு வளர்ச்சி அடைந்து கலை அறிவியல், வேளாண்மை, பொறியியல்,மருத்துவம் என 9 புலங்களையும், 52 துறைகள் கொண்டதாக உள்ளது. 8500 ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் பணியாற்றும் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.

Advertisment

பல்கலைக்கழகம் எம்ஏஎம் நிர்வாகத்தில் இருந்தபோது பல்வேறு முறைகேடு, ஊழல்கள் நடந்ததால் கடந்த 2013ஆம் ஆண்டு அரசு பல்கலைக்கழகத்தை முழு நிர்வாக கட்டுபாட்டில் எடுத்து தனிச்சட்டம் இயற்றியது. அரசு காட்டுபாட்டுக்கு வந்த பிறகு முதல் துணைவேந்தராக கோவையை சார்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் மணியன் முதல் துணைவேந்தராக பதவியேற்றார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

அவரது பதவிக்காலம் வரும் மே 27-ல் முடிவடைகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் தமிழக ஆளுநர் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமிக்க மூன்று பேரை கொண்டு தேடுதல் குழுவை நியமித்துள்ளார். அவர்களிடம் மும்பை ,டெல்லி, உத்திரகாண்ட், ஜார்கான்ட், தெலுங்கானா, ஆந்திரா., தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து 116 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Advertisment

இதில் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்கள், பாணியாற்றிகொண்டிருக்கும் தற்போதைய துணைவேந்தர் மணியன், முன்னாள் வேளாண்துறை தலைவர் கதிரேசன், முன்னாள் தொலைதூரகல்வி இயக்குநர் நாகேஷ்வரராவ் உள்ளிட்ட பலர் விண்ணப்பித்துள்ளார்கள்.

பல்கலைக்கழகம் நிதிச்சிக்கலில் தவித்த போது அரசுடன் இனக்கமாக செயல்பட்டு நிதிகளை பெற்று சுனக்கம் இல்லாமல் பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வருகிறார். தற்போதைய துணைவேந்தர் மணியன் மேலும் 7-வது ஊதிய குழு படி பல்கலைக்கழக ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்து கடந்த இரு நாட்களுக்கு முன் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஊழியர் சங்க கூட்டமைப்பினர் துணைவேந்தரை சந்தித்து மரியாதை செலுத்தியுள்னர்.

மேலும் புதியவர் துணைவேந்தராக வந்தால் பல்கலைக்கழகம் பற்றி புரிந்து கொள்வதற்குள் பெரிய பாடாக இருக்கும், மேலும் ஊழியர்கள் குறித்து இங்குள்ள நடைமுறைகள் குறித்து புரிய வைப்பதற்குள் ஊழியர் சங்கத்திற்கு பெரிய சிரமம் ஏற்படும். எனவே மறுபடியும் மணியனே துணைவேந்தராக வந்தால் நல்லது என்று சமீபத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகனை சந்தித்த பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் அவரிடம் கூறியுள்ளனர். அவரும் சரி பார்க்கலாம் என ஆறுதல் கூறியுள்ளார். மணியனும் மறுபடியும் பதவிக்கு வருவதற்கு ஊழியர்களின் ஆதரவை காண்பித்து எல்லா ஏற்பாடுகளையும் கடைசி எல்லை வரை சென்று செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பல்கலைக்கழக ஊழியர்கள் மத்தியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நியமிக்கபட்டது போல் இந்த பல்கலைக்கழகத்திலும் வெளிமாநிலத்தை சார்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் அல்லது ஆர்எஸ்எஸ் ஆசி பெற்றவர்கள் தான் துணைவேந்தராக வர வாய்புள்ளது என்று பல்கலைக்கழக வட்டாரத்தில் பரவலான பேச்சாக உள்ளது. மேலும் துணைவேந்தர் நியமனம் குறித்து தமிழக பாஜக மற்றும் அதிமுகவினர் துணைவேந்தருக்கு விண்ணப்பித்தவர்களிடம் கோடிகளில் பேரத்தை தொடங்கி முடித்துள்ளதாக ஊழியர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

தமிழை வளர்த்த பெருமை வாய்ந்த பல்கலைகழகத்திற்கு துணைவேந்தர் நியமனத்தில் குளறுபடிகள் இருந்தால் கடந்த காலத்தில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை விட மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று பல்கலைக்கழகத்தின் மீது பற்றுகொண்டவர்கள் கூறுகிறார்கள்.