Who is the leader of AIADMK? - OPS- EPS Individual advice!

Advertisment

அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும்பொதுக்குழுக்கூட்டம் வரும் ஜூன் 23- ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் ஒற்றைத் தலைமைக் கோரி தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இரண்டாவதுநாளாகச்சென்னையில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம்,சட்டமன்ற உறுப்பினர்.மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதைத் தொடர்ந்து, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Advertisment

ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வுக்குதலைமையேற்ககோரி பல நகரங்களில்சுவரொட்டிகளைக்கட்சித் தொண்டர்கள் ஒட்டிய நிலையில், இரு தலைவர்களும் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, அ.தி.மு.க.பொதுக்குழுகூட்டத்தில் பங்கேற்க ஏதுவாக, ஜாமீன் நிபந்தனைகளை இடைக்காலமாக நீக்கி ஐந்து நாள் தளர்வுவழங்ககோரி உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்திருந்தமனுவைத்தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

இதனால்,பொதுக்குழுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்பது கேள்விக் குறியாகியுள்ளது.