களியக்காவிளை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சையது முகம்மது மற்றும் அப்பாஸ் ஆகியோரைப் பிடித்து கேரள காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Advertisment

police

அப்துல் சமீம், தவ்பீக் இருவரும் களியக்காவிளை சோதனை சாவடியில் இருந்த எஸ்ஜ வில்சனை சுட்டுக்கொல்வதற்கு முன் அங்கு வேவு பாா்பதற்காக சையத்அலி என்பவரை தொடா்பு கொண்டதாகவும், இதற்காக பாறசாலைக்கும் இஞ்சிவிளைக்கும் இடையில் காராளி சந்திப்பில் பயங்கரவாதிகள்வந்த ஸ்காா்பியோ வாகனம் நின்றதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

அதன்பிறகு சோதனை சாவடியில் ஆள் இருக்கிறது என்பதை செய்தலி உறுதிபடுத்திய பிறகு தான் அங்கிருந்து களியக்காவிளை சென்று இருக்கின்றனா். பின்னா் வில்சனை சுட்டுவிட்டு மீண்டும் கேரளாவுக்கு செல்லும் வரைசையத்அலி அங்கு இருந்ததாகவும், கேரளா உளவுதுறைக்கு தகவல் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் களியக்காவிளையில் அப்படி ஒருசையத் அலி உண்டா? என உளவு போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisment