prapu

புதுக்கோட்டை மாவட்ட அமமுக செயலாளர் மணமேல்குடி பரணி கார்த்திகேயனின் உதவியாளர் பிரபு கடந்த 23 ந் தேதி தனது முகநூல் பக்கத்தில் வண்ண சட்டை அணிந்த ஒருவர் காவல் உதவி ஆய்வாளர் ஒருவரின் காக்கி தொப்பியை அணிந்து சிரித்தபடி போஸ் கொடுத்திருந்த படத்தை வெளியிட்டிருந்தார்.

Advertisment

இந்த படத்தைப் பார்த்த போலிசார் முதல் பொதுமக்கள் வரைகண்ணியமிக்க போலீஸ் தொப்பியை அமமுக அறந்தாங்கி எம்எல்ஏ ரெத்தினசபாபதியின் கார் டிரைவர் ராஜேந்திரனுக்கு அணிவித்து அழகுபார்த்திருக்கிறார்கள். அறந்தாங்கி விருந்தினர் மாளிகையில் எம்எல்ஏ தங்கி இருந்த போது அங்கு சென்ற அறந்தாங்கி காவல் உதவி ஆய்வாளர் ஒருவரின் தொப்பி தான் இது. இப்படி எல்லாம் சீருடை, தொப்பிகளை கொடுக்க கூடாது என்பது கூட அந்த ஆய்வாளருக்கு தெரியல.. அதையும் படம் எடுத்து முகநூல்ல பதிவிட்டிருக்காங்க என்றனர் சிலர்.

Advertisment