Advertisment

''யாருக்கும் இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை'' - வீடியோ வெளியிட்டு ராஜினாமா செய்த காவலர்

publive-image

நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று நாட்டின் பல இடங்களிலும் தேசியக்கொடிஏற்றி வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தமிழகத்திலும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்வி நிலையங்களில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இந்தநிலையில், நாட்டில் யாருக்கும் இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை. அதனால், என்னுடைய பணியை இந்த 77ஆவது சுதந்திர தினத்தில் ராஜினாமா செய்கிறேன் என காவலர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளதாவது, ''தேசத்தில் வாழும் அனைத்து சொந்தங்களுக்கும் எனது காலை வணக்கம். எனது பெயர் கார்த்திக். முதல் நிலை காவலராகராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறேன். இந்த தேச திருநாட்டில் சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளாகியும் இன்றும் சுதந்திரம் இல்லாமல் இந்த சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த தேசத்திற்காகவும், இந்த சமூகத்திற்காகவும் நான் உயிராய் நேசிக்கும் எனது காவல் பணியை இந்நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 15, 2023 அன்று ராஜினாமா செய்கிறேன். நன்றி வணக்கம். ஜெய் ஹிந்த்'' என தெரிவித்துள்ளார்.

Advertisment

police ramanthapuram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe