Advertisment

'இத்தனை நாட்கள் கட்சியைக் காப்பாற்றியது யாரு?' - சசிகலாவுக்கு எடப்பாடி கேள்வி

 'Who has saved the party for so many days?'- Sasikala asked the question

இத்தனை நாட்கள் அதிமுகவை காப்பாற்றியது யார் என எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

Advertisment

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''இயற்கை சீற்றத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது, விவசாயிகளின் பயிர்கள் பாதிக்கப்பட்ட போது காப்பீட்டு திட்டத்தின் மூலமாக இந்தியாவிலேயே அதிக காப்பீடு இழப்பீடு பெற்றுத் தந்த அரசு அதிமுக அரசு. விவசாயிகளின் நலன்கருதி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தஏரி குளங்களை தூர்வாரச் செய்து மழைக்காலத்தில் நீர் சேகரித்து வைக்கப்பட்டது. கோடைகாலத்தில் விவசாயிகள் நிலத்திற்கு அந்த தண்ணீரை பயன்படுத்தினார்கள். குடிநீர் பஞ்சமும் இல்லாமல் இருந்தது.

Advertisment

அதோடு மேட்டூரில் இருந்து திறக்கப்படுகின்ற நீர் கடைக்கோடியில் இருக்கும் விவசாயிகளுக்கும் தங்குதடை இல்லாமல் செல்ல வேண்டும் என்பதற்காக அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்பட்டது. இப்படி பல திட்டங்களை விவசாயிகளுக்காக அதிமுக அரசு செய்தது. ஆனால் இப்பொழுது திமுக அரசு குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு தரவில்லை. 78.67 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால் அதில் 24.50 கோடி தொகை மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கி இருக்கிறார்கள். இது இரண்டையும் சேர்த்துதான் 78.67 கோடி ரூபாய். அதைவைத்துபார்த்தால் குறுவை தொகுப்புக்கு 54.17 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கும். இது போதாது. ஏனென்றால் குறுவை சாகுபடிக்கும் முழுமையாக தண்ணீர் கிடைக்கவில்லை.

இன்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி சம்பவ இடத்திலேயே மூன்று பேர் இறந்ததாகவும் செய்தி ஊடகத்தில் வந்திருக்கிறது. இன்னும் சில பேர் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வருகிறது. கிட்டத்தட்ட 40 பேர்கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக தகவல் வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து கள்ளச்சாராய சாவுகள் நடந்த வண்ணம் இருக்கிறது. சட்டமன்றத்திலும் பலமுறை சொல்லியிருக்கிறேன் போதைப் பொருள் புழக்கத்தைத்தடுக்க வேண்டும்; கள்ளச்சாராயத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று, ஆனால் இன்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அப்பாவி மக்கள், ஏழை மக்கள் கள்ளச்சாராயம் அருந்தி விலை மதிக்க முடியாத உயிரை இழந்து இருக்கிறார்கள்'' என்றார்.

அதனைத் தொடர்ந்து 'சசிகலா மீண்டும் அரசியலில் ரீஎன்ட்ரி கொடுத்திருப்பதாகக் கூறியுள்ளார். அதிமுகவை காப்பாற்றப் போகிறேன் என்று சொல்கிறாரே' என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, ''இத்தனை நாள் அதிமுகவை யார் காப்பாற்றிக் கொண்டிருந்தார். இப்பதான் காப்பாற்ற வந்திருக்கிறார்களா? இது என்ன வேலையா ரீஎன்ட்ரி கொடுக்க. ஒரு வேலைக்கு சென்று விட்டு மூன்று வருஷம் நின்று விட்டு மறுபடியும் வேலைக்கு சேர்வதா ரீஎன்ட்ரி. 2021-ல் என்ன சொன்னார்கள் நான் பொதுவாழ்க்கையில் இருந்து விலகி விட்டேன் என்று சொன்னார்கள். இப்பொழுது ரீ என்ட்ரி என்கிறார்கள். இத்தனை நாட்கள் கட்சியைக் காப்பாற்றியது யாரு? தொண்டன்'' என்றார்.

admk sasikala
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe