Skip to main content

யார் இந்த 'கிராண்ட் சன்? - கல்யாணமே ஆகாத எம்.எல்.ஏ.வுக்கு கிராண்ட் சன் வந்தது எப்படி?

Published on 16/03/2022 | Edited on 16/03/2022

 

Who is this 'Grand Son'? - How did Grand Son come to be an unmarried MLA?

 

'கிராண்ட் சன் ஆஃப் நாகர்கோவில் எம்.எல்.ஏ' எனும் வாசகம் இடம்பெற்ற பைக்கும், அதன்மீது போஸ் கொடுத்து அமர்ந்திருக்கும் இளைஞரும்தான், தற்போதைய வைரல்.

 

கடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாரதிய ஜனதா கட்சி, நான்கு இடங்களை கைப்பற்றியது. இதில், ஆறுமுறை போட்டியிட்டு ஏழாவது முறையாக வெற்றிபெற்ற, நாகர்கோவில் எம்.எல்.ஏ எம்.ஆர். காந்தியின் வெற்றி, பலரது கவனதையும் ஈர்த்தது. அவர் மிக எளிமையாக தன்னை வெளிப்படுத்திக் கொள்பவர். காலில் செருப்பு அணியாதவர். அப்படி வெறும் காலுடன்தான் சட்டமன்றம் வரை சென்று வருகிறார். கதர் வேட்டி, கதர் சட்டையுடன் வலம் வருபவர். ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரான காந்தி, திருமணம் செய்து கொள்ளாதவர். அப்படி இருக்கையில், காந்தியின் பேரன் எனும் அடையாளத்துடன் வலம் வரும் போட்டோவில் இருக்கும் இளைஞர் யார் என பலரும் கேள்வி எழுப்பினர். அவருக்கும் எம்.எல்.ஏ. காந்திக்கும் என்ன தொடர்பு? 

 

நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினரான எம்.ஆர்.காந்தியின் டிரைவராக இருந்து உதவியாளராக உயர்ந்தவர் கண்ணன். இவரது மகன்தான் அம்ரிஷ். இவர்தான் அந்த வைரல் போட்டோவில் இருக்கும் இளைஞர். நீண்ட நெடுங்காலமாக தன்னுடன் பணியாற்றும் கண்ணன் மீதும் அவரின் குடும்பத்தார் மீதும் எம்.எல்.ஏவுக்கு நல்ல அபிப்பிராயம் இருக்கிறதாம். இதைப் பயன்படுத்திக் கொண்ட இளைஞர் அம்ரீஷ், இப்படி சட்டத்தை மீறி நடந்துகொண்டதாக அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர். 

 

இலவச இணைப்பு போல, அந்த வண்டியில் வழக்கறிஞர் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டு இருக்கிறது. இதையடுத்து, வக்கீலுக்கு படித்துவிட்டு சட்டத்தையே மதிக்காமல் இருப்பதாகவும் நெட்டிசன்கள் அம்ரீஷை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்