Advertisment

யாருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது- பட்டியலை வெளியிட்ட கூட்டுறவு விற்பனையாளர் சங்கம்!

Who Does Not Have a Jewelry Loan Discount- Name List Co-op Vendors Association!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரி எதிரேயுள்ள சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனையாளர் சங்கத்தில் தமிழ்நாடு அரசு அறித்துள்ள 5 சவரனுக்குள் நகைக்கடன் வைத்துள்ளவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என்ற அரசாணையின் படி, கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் கிடையாது என்பது குறித்த பெயர் பட்டியலை சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் கூட்டுறவு சங்க ஊழியர்கள் வெளியிட்டு, சங்க கட்டிடத்தின் வாயிலில் பட்டியலை ஒட்டி வைத்துள்ளனர்.

Advertisment

இதனை பார்த்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று கூட்டுறவு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சிதம்பரம் தலைமை அலுவலகத்தில் 684 பேரும், காட்டுமன்னார்குடி கிளை அலுவலகத்தில் 954 பேரும் என மொத்தம் 1638 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

GOLD LOAN tn govt
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe