இந்தியாவில் தொடர்ந்து கரோனாவால்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஈஷா யோகா மையத்தில் கடந்தஒரு மாதத்திற்குமேலாக இங்கிலாந்தைச் சேர்ந்த 5 பேர் தங்கியிருந்தனர். ஏற்கனவேபல நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் ஈஷா யோகா மையத்தில் இருக்கும் நிலையில், இந்த ஐந்து பேர் மட்டும் தங்களது சொந்த நாட்டிற்கு இன்றுதிரும்பினர்.
ஈஷாயோகா மையம் சார்பில் மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெறப்பட்டு, கோவையில் இருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்தும் இங்கிலாந்திற்கும் திரும்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் இன்றுஅவர்கள் பேருந்து மூலம் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-சிவா