Advertisment

''அமெண்ட்மெண்ட் பேப்பர வாங்கி கிழித்துப் போட்டது யாரு? ;தன்வினை தன்னைச் சுடும்''-ஹெச்.ராஜா பேட்டி

nn

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக பிரமுகர் ஹெச்.ராஜாவிடம் செய்தியாளர்கள் ராகுல் காந்தி தகுதி நீக்க நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''நீரவ் மோடிய அசிங்கப்படுத்தனும், நரேந்திர மோடிய அசிங்கப்படுத்தனும் என்ற உற்சாகத்தில் மோடி என்கின்ற சமுதாயத்தை இழிவுபடுத்தி ராகுல் காந்தி ட்வீட் போடுகிறார். கேஸ் போட்டது சென்ட்ரல் கவர்ன்மென்டா? குஜராத் கவர்மெண்டா? அல்லது மோடியா? இவர்கள் யாரும் வழக்கு தொடரவில்லை.

Advertisment

அந்த மோடி சமுதாயத்தைச் சேர்ந்த ஒருத்தர் கேஸ் போடுகிறார். எங்கள் சமுதாயத்தை இழிவுபடுத்தி ட்வீட் பண்ணி இருக்கிறார் என்று, அப்பொழுது சூரத் மாவட்ட நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை என தீர்ப்பு கொடுத்தது. இந்த ஜட்ஜ்மெண்ட் சுப்ரீம் கோர்ட்டில் வந்தது. யாராவது ஒருத்தர் மீது இரண்டு வருடத்திற்கு மேல் தண்டனை கொடுக்கப்பட்டால் அவர் உடனே பதவி இழப்பார் என்று அதற்கு அமெண்ட்மெண்ட் கொண்டு வந்தது யாரு மன்மோகன் சிங். அந்த அமெண்ட்மெண்ட் பேப்பர வாங்கி அங்கேயே கிழித்துப் போட்டது யாரு? 'தன்வினை தன்னைச் சுடும்' இதில் மத்திய அரசுக்கோ, பிரதமர் மோடிக்கோ என்ன ரோல் இருக்கிறது. இதில் அரசாங்கத்திற்குதொடர்பு இல்லை'' என்றார்.

Advertisment

congress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe