யார் நீங்க? நான் ரஜினி.. அது தெரியாதா எங்களுக்கு..! இளைஞர் சரமாரி கேள்வி!

rajini

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 100 நாட்களகா நாங்கள் போராடிய போது சென்னை ரொம்ப தூரத்தில் இருந்ததா? என ரஜினியிடம் இளைஞர் சரமாரி கேள்வி எழுப்பினார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது காயமடைந்த ஒரு இளைஞரை மருத்துவமைனயில் சந்தித்த ரஜினிகாந்த் அவரிடம் நலம் விசாரித்தார்.

ஆனால் அந்த இளைஞரோ யார் நீங்க என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அதற்கு நான் ரஜினி என அவர் பதிலளிக்க.. அது எங்களுக்கு தெரியாதா? நீங்க தான் ரஜினின்னு யாருக்கும் தெரியாமல் இல்லை. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 100 நாட்களாக நாங்கள் போராடிய போது சென்னை ரொம்ப தூரத்தில் இருந்ததா? என சரமாரி கேள்விகளை எழுப்பினார். இதனை கண்டு அதிர்ந்து போன ரஜினி அங்கிருந்த மெதுவாக சிரித்துக்கொண்டே நழுவி சென்றார்.

ரஜினியிடம் இளைஞர் ஒருவர் சரமாரி கேள்வி எழுப்பியது வீடியோவாக சமூகவளைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

rajinikanth Thoothukudi
இதையும் படியுங்கள்
Subscribe