Advertisment

''வெள்ளை தாமரையும்... துளிர்க்கும் இலையும்...''-தமிழிசை சொன்ன குட்டி ஸ்டோரி!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மகள் ரிதன்யா பிரியதர்ஷினியின்பரதநாட்டிய அரங்கேற்ற விழா சென்னையில் நடைபெற்றது.சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், பாஜக முன்னாள் தமிழக தலைவரும்,தற்போதைய தெலுங்கானா மாநில ஆளுநருமானதமிழிசை சௌந்தரராஜன், இசையமைப்பாளர் இளையராஜா, திரைப்பட இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் பங்கு பெற்றனர்.

Advertisment

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாமரையையும் இரட்டை இலையும் வைத்து குட்டி கதைஒன்றைச் சொன்னார். அரங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ''ஏன் இந்த மேடை எனக்கு பிடித்திருக்கிறது என்றால் முதல் பாடல் 'வெள்ளை தாமரை பூவில் இருப்பாள்' என்ற பாடல் அதனால் முதல் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். நிறைவான பாடல் 'திக்குத் தெரியாத காட்டில்' என்ற பாடல்.திக்குத் தெரியாமல் எப்பொழுதும் காடு இருக்கும். இலைகள் துளிர்க்காமல் இருக்கும் பொழுதுதான் காடு திக்குத் தெரியாமல் இருக்கும். இலைகள் துளிர்க்கதுளிர்க்கதிக்குத் தெரியாததேஇந்த தமிழகத்தில் கிடையாது. அதுவும்இலைகள் இரண்டு இரண்டாகதுளிர்த்தால்நிச்சயமாக மிகப்பெரும் வெற்றியாக கிடைக்கும்'' என்றார்.

Advertisment

admk Tamilisai Soundararajan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe