Skip to main content

வீட்டில் தஞ்சமடைந்த வெள்ளை காகம்; ஆச்சரியத்துடன் ரசித்து செல்லும் மக்கள்

 

nn

 

தூத்துக்குடியில் வெள்ளை காகம் ஒன்று ஒருவரின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளது ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வெள்ளை காகத்தை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு செல்கின்றனர்.

 

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காட்டு ராஜா. இவர் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டிற்கு அடிக்கடி வெள்ளை காகம் ஒன்று பறந்து வந்து வீட்டிலேயே சிறிது நேரம் இருந்து விட்டு பறந்து செல்கிறது. வெள்ளை நிறத்தில் உள்ள காக்கையை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். வெள்ளை காகம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !