கடலூர் முதுநகர் சாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. நேற்று இவரது வீட்டிற்குள் பாம்பு புகுந்து விடவே பாம்பு ஆர்வலரான கடலூரைச் சேர்ந்த செல்வாவுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் பாம்பு பிடி உபகரணங்களுடன் அப்பகுதிக்குச் சென்று பாம்பினை தேடும் பணியில் ஈடுபட்டார்.

Advertisment

snake

அப்போது, செல்லா அங்கிருந்த பாம்பை பார்த்தவுடன் வியந்தார். ஏனெனில்,பாம்பு வெள்ளை நிறத்தில் இருந்தது. இதனையடுத்து பாம்பினை லாவகமாக பிடித்தார். பிடிபட்ட இப்பாம்பு நமது பகுதிகளில் காணப்படுவது அரிது என்று செல்வா கூறினார். பிடிப்பட்ட வெள்ளை நாகத்தை பார்க்க பொதுமக்கள் ஆர்வத்துடன் அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.