/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2984.jpg)
கோடிக்கரையில் இன்று காலையில் கடலின் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு சுழல்காற்றாக வீசியதால் மீனவர்கள் பதறி அடித்துக்கொண்டு ஓட்டம்பிடித்தனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள கோடிக்கரை கடலில் தீடீரென நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதால் பலத்த சுழல்காற்று வீசியது. இந்த சுழல்காற்று கடலில் இருந்து பூதம்போல கிளம்பி தரையை நோக்கி சுழண்டடித்தபடியே வந்தது. அப்பொழுது கடற்கரையில் அடுக்கிவைத்திருந்த வலைகட்டு, பெட்கள் என அங்கிருந்த பொருட்களை தூக்கிவீசியது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_850.jpg)
மேலும் அங்கிருந்த மீனவர்கள் தங்குவதற்கு அமைக்கப்பட்டிருந்த கீற்றுகொட்டைகளும் பறந்தன. இதைபார்த்த கடலோரம் இருந்த மீனவர்கள் அச்சமடைந்து கூச்சல் போட்டுக்கொண்டு தலைதெறித்து ஓடினர். சுமார் 10 நிமிடம் வீசிய இந்த சூழல் காற்றால் கடற்கரையே மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. அந்த சமயத்தில் கடற்கரை பகுதியில் இருந்த மீனவர்கள் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Follow Us