While the minister was speaking, power cut... Power station engineers were transferred!

Advertisment

அமைச்சர் பேசிக் கொண்டிருக்கும் போதுமின்சாரம் கட்டான நிலையில் மின் நிலைய பொறியாளர்கள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 While the minister was speaking, power cut... Power station engineers were transferred!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அரசு மேல்நிலை பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அவர் விழா மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது மின்வெட்டுஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர், எல்எம்ஏ ஆகியோர் மின் அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தபின்பும் மின்விநியோகம் சரியாகவில்லை. இதனால் தனது உரையை பாதியிலேயே முடித்துக்கொண்டு அமைச்சர் சென்றுவிட்டார்.இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காட்பாடி தாராபடவேடு பகுதி துணை மின் நிலைய உதவிப் பொறியாளர் கவி கிரண் மற்றும் சிட்டிபாபு ஆகிய இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.