Skip to main content

மேடையில் மணமகன்... குளிக்க சென்ற மணமகள்... கல்யாண வீட்டில் பரபரப்பு சம்பவம்!

Published on 03/09/2019 | Edited on 03/09/2019

கல்யாண வீட்டில் குளிக்க சென்ற மணமகள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் வெள்ளைக்குட்டை எனும் கிராமத்தில் வசிப்பவர் சின்னத்தம்பி. இவர் விவசாயம்  செய்து வருகிறார். இவருடைய மகள் ஐஸ்வர்யா. சின்னத்தம்பி மகள் ஐஸ்வர்யாவுக்கு மோட்டூர் கிராமத்தை சேர்ந்த பிச்சாண்டி மகன் விநயாகத்துக்கும் திருமணம் நடைபெற பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஐஸ்வர்யாவுக்கும், விநாயகத்துக்கும் நேற்று திருமணம் நடக்க இருந்தது. தாலி கட்டுவதற்கு முன்பு பெண்ணிற்கு செய்ய வேண்டிய சம்பிரதாயங்களான நலங்கு வைத்துள்ளனர். நலங்கு வைக்கும் சம்பிரதாயம் முடிந்ததும் ஐஸ்வர்யா குளிக்க சென்றார்.

 

girl



குளிக்க சென்ற மணப்பெண் ஐஸ்வர்யா வெகு நேரமாகியும் பாத்ரூமில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் குளியலறை கதவை தட்டி ஐஸ்வர்யா என்று கேட்டு உள்ளனர்.அப்போது பாத்ரூமில் இருந்து எந்த சத்தமும் வராததால் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். மணப்பெண் ஐஸ்வர்யா பாத்ரூமில் இல்லாததை பார்த்து  இரு வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு ஐஸ்வர்யாவின் மொபைல் எண்ணுக்கு அழைத்துள்ளனர் அதிலும் எந்த பதிலும் இல்லை. அதற்கு பிறகு பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் ஐஸ்வர்யாவை கண்டுபிடிக்க இயலவில்லை.   


திருமணம் நடக்க இருந்த நாளன்று மணப்பெண் காணாமல் போனது மணமகனின் தந்தை பிச்சாண்டியை  அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் மனமுடைந்த பிச்சாண்டி உடனடியாக தன் உறவினர்களுடன் சொந்த ஊருக்கு திரும்பி சென்றார். மேலும் சின்னத்தம்பி தன்னுடைய உறவினர்களுடன் சென்று அப்பகுதி காவல்நிலையத்தில் மகளை காணவில்லை என்று புகாரளித்தார். புகாரை வாங்கிய போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். திருமண நாளன்று மணப்பெண் காணாமல் போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.