
நாமக்கல்லில் தந்தைக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுக்க மகன் முயன்ற போது கார் நிலை தடுமாறி கிணற்றில் விழுந்ததில் தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள பெரியகுளம் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு அவருடைய மகன் கோபி என்பவர் கார் ஓட்ட கற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அப்பொழுது தந்தை ராஜேந்திரன் காரை பின்னோக்கி இயக்குவதற்கு பதிலாக முன்னோக்கி இயக்கியதால் முன் பக்கத்தில் இருந்தவிவசாய கிணற்றுக்குள் கார் விழுந்தது. இது குறித்து உடனடியாக மீட்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மகன் கோபி உயிருடன் தப்பிய நிலையில் தந்தை ராஜேந்திரன் கிணற்றுக்குள்ளேயே சடலமானார். காரையும் உயிரிழந்த ராஜேந்திரனையும் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்புப் படையினர் மேலே கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)