Advertisment

மீண்டும் நடந்த மறைமுகத் தேர்தலில் எந்தெந்த கட்சி வெற்றி?

Which party won the by-election again?

Advertisment

தமிழகத்தில் சில இடங்களில் நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் எந்தெந்த இடங்களில் எந்தெந்த கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன என்பது குறித்து பார்ப்போம்.

பூந்தமல்லி நகராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க.வின் காஞ்சனா சுதாகர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சித் தலைவராக தி.மு.க. வைச் சேர்ந்த பரமேஸ்வரன் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சித் துணைத்தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த கலைராஜன் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

திருப்பத்தூர், உதயேந்திரம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க.வின் பூஜாராணி வெற்றிப் பெற்றார். சேலம் அருகே நங்கவள்ளி, வனவாசி பேரூராட்சிகளின் தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது. சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் 8 வாக்கு பெற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குமார் வெற்றி பெற்றார்.

Advertisment

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க.வின் ரம்யா 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி பேரூராட்சித் தலைவருக்கு போட்டியிட்ட பா.ஜ.க.வின் விஜயலட்சுமி 9 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். தென்காசி மாவட்டம், திருவேங்கடம் பேரூராட்சித் தலைவராக ம.தி.மு.க.வைச் சேர்ந்த பாலமுருகன் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe