Advertisment

இந்த வாரம் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுவது யார்?

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 80 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் சேரன் பிக் பாஸ் வீட்டிலிருந்து சீக்ரெட் ரூமில் வைத்து இருந்தனர். பின்பு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

Advertisment

big boss

இதனிடையே பிக் பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து செல்வதால் போட்டியாளர்களுக்கு ஆறுதலாக இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வாரம் எந்த போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு பிக் பாஸ் ரசிகர்களிடையே கிளம்பியுள்ளது. இந்த வார எவிக்சன் பட்டியலில் கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின் மற்றும் வனிதா ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஒருவர் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுவார் என்று கூறிவருகின்றனர். இந்த நிலையில் ஷெரின் மற்றும் வனிதா ஆகிய இருவரும் மிக குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதால் இவர்களில் ஒருவர் இந்த வாரம் பிக் பாஸ் வேட்டை விட்டு வெளியேறுவார் என்று சொல்லப்படுகிறது. மேலும் தற்போது நிலவரப்படி வாக்குகளில் வனிதா கடைசி இடத்தில் இருப்பதால் அவர் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் வனிதா பிக் பாஸ் வீட்டில் இருந்தால் தான் போட்டி விறுவிறுப்பாக செல்கிறது. எனவே அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தால் இறுதி கட்ட போட்டி சுவாரியாசமாக இருக்கும் என்றும் கூறிவருகின்றனர்.

Advertisment
tv show contest vanitha vijayakumar kamal big boss
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe