'Where's your boy...?' Relatives of the woman who brutally assaulted her mother

கள்ளக்குறிச்சியில் பெண்ணின் குடும்பத்தார் மாப்பிள்ளையின்தாயைக்கொடூரமாகத்தாக்கும்வீடியோகாட்சிகள் இணையத்தில்வைரலாகிவருகிறது.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது எஸ்.கொளத்தூர். இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் தனபால். முடி திருத்தும் வேலை செய்து வந்தார். இவருடைய மகன் சூர்யா. ஐ.டி படிப்பை முடித்துவிட்டு சென்னையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சூர்யா அதே கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை சிலவருடங்களாகக்காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அப்பெண்ணை வீட்டை விட்டு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார். இருவரும் சென்னையில் வசித்து வருகின்றனர்.

Advertisment

இந்ததிருமணத்திற்குப்பெண்ணின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தநிலையில் சில மாதங்களாகவே சூர்யா வீட்டிற்குச் சென்று சண்டையிட்டு வந்தனர். இந்த நிலையில் அண்மையில் சூர்யாவின் தாய் சுமதி வீட்டில் தனியாக இருந்தபொழுது பெண்ணின் உறவினர்கள் வீட்டுக்கு வந்தனர். 'உன் மகன் எங்கே' எனக் கேட்டு சண்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது சுமதிஎனக்குத்தெரியாது என்று கூறிய நிலையில் பெண்ணின் உறவினர்கள் சூர்யாவின் தாய் சுமதியை ஆபாசமாகப் பேசி கும்பலாகச் சேர்ந்து கொடூரமாகத்தாக்கினர். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகிவைரலாகிவருகிறது. இதனைத் தொடர்ந்து தகவலறிந்த சங்கராபுரம் காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணின் தாய் சிவகாமி, தந்தை ஏழுமலை உள்ளிட்ட அவரது உறவினர்கள் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.