'Where is Vijayakanth ...?' -  volunteers to cry to Premalatha Vijayakanth!

Advertisment

அண்மையில் கடலூர் மாவட்டம் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுமிகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆறுதல் கூற நேரில் சென்ற நிலையில் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தும் சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த தேமுதிக தொண்டர் ஒருவர் 'என் கேப்டன் எங்கே...? விஜயகாந்த் எங்கே...? என பிரேமலதா விஜயகாந்த்திடம் கண்ணீர் விட்டு அழுதபடி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

உயிரிழந்த சிறுமிகள் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறிய பின்பு தேமுதிக சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. அப்போது தேமுதிக தொண்டர் இவ்வாறு 'கேப்டன் எங்கே?' என கதறி அழுத நிலையில், அவருக்கும் ஆறுதல் கூறி சமாதானம் செய்தார் பிரேமலதா விஜயகாந்த்.