Advertisment

சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரக் கலசம் எங்கே? சமூக வலைதளத்தில் வைரல்!

 Where is the urn of Chidambaram Natarajar Temple located? Viral on social website!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என நான்கு கோபுரங்கள் உள்ளன. ஒவ்வொரு கோபுரத்திலும் 12 கலசங்கள் இருப்பது வழக்கம். இந்த நிலையில் வடக்குக் கோபுரத்தில் 11 கலசங்கள் மட்டுமே உள்ளது. ஒரு கலசம் இல்லை.இதனை அறிந்து, கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் நேரில் புகைப்படம் எடுத்து, சமூக வலைதளத்தில் பதிந்துள்ளனர். மேலும், சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரக் கலசம் எங்கே?என இந்தப் படத்தைப் போட்டு வைரலாக்கியுள்ளனர்.

Advertisment

இதுகுறித்து நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களின் முன்னாள் செயலாளர் பாஸ்கரிடம் கேட்டபோது,கடந்த 6 மாதத்திற்கு முன்பு காற்றில் வடக்குக் கோபுரத்தில் உள்ள கலசம் ஆடியது. இதனால், அதைப் பத்திரமாக எடுத்து வைத்துள்ளதாகவும், பூஜை செய்து டிசம்பர் மாதத்தில் கலசத்தை மீண்டும் கோபுரத்தில் வைக்க இருப்பதாகவும் கூறினார்.

Advertisment

VIRAL Chidambaram Natarajar temple chithambaram district
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe