
நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவன்எஸ்டேட்பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்துவந்த 'டி23' புலியை மயக்க ஊசிசெலுத்திப்பிடிக்கும் பணி 14 ஆவது நாளாக வனத்துறை மேற்கொண்டு வரும் நிலையில், தற்பொழுதுபுலியைப்பிடிக்கும் பணிதற்காலிகமாகத்தளர்த்தப்பட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில்புலியைச்சுட்டுக்கொல்லஉத்தரவிடப்பட்டிருந்தாலும் வனத்துறை மயக்க ஊசி செலுத்தியேபுலியைப்பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இந்நிலையில் புலி மசினகுடியின்சிங்காராவனப்பகுதிக்கு இடம்பெயர்ந்ததாக வனத்துறை தெரிவித்திருந்தது. அதனையடுத்து கும்கி யானைகளை வைத்துபுலியைப்பிடிக்கமுயன்றவனத்துறைஅதனைக்கைவிட்டு, காடுகளில் மரங்கள் மேல் பரண்அமைத்துத்தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதேபோல் தானியங்கிகேமராக்களும்பொருத்தப்பட்டு புலியின்நடமாட்டத்தைக்கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால்கேமராவில்புலியின் நடமாட்டம் இல்லாததால் பரண்அமைத்துத்தேடுதல் நடத்தும் முறையை வனத்துறை கைவிட்டுள்ளது. முன்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வனத்துறையினரைவிடக்குறைந்த பணியாளர்களேதற்பொழுதுபுலியைத்தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.

ஒருவேளை மீண்டும் புலி கூடலூர் பகுதிக்கே சென்றிருக்கலாம்எனச்சந்தேகித்துள்ளவனத்துறை, 'டி23' உணவு சாப்பிட்டு மூன்று நாட்கள்ஆவதால்மீண்டும் கால்நடைகளைவேட்டையாட வனத்தை ஒட்டியுள்ள பகுதிக்கு மீண்டும் வரலாம் எனவே அதுவரைபுலியைத்தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறை முடிவுசெய்துள்ளதாகத்தகவல் வெளியானது. இருப்பினும் வனத்தை ஒட்டியபகுதிகளுக்குக்கால்நடைகளைமேய்க்கச்செல்லவேண்டாம்என வனத்துறை அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்புலி இதுவரை நான்கு பேரையும், 30க்கு மேற்பட்ட கால்நடைகளையும் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)