/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4009.jpg)
சேலம் லைன்மேடு பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர், சேலம் அம்மாபேட்டை காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு.
இது தொடர்பாக வீட்டில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஏப். 28ம் தேதி இரவு 11 மணியளவில், தனது மனைவியுடன் அலைபேசியில் பேசியுள்ளார். அதன்பிறகு அவர் வீட்டுக்குச் செல்லவில்லை.அவர் பணியாற்றி வரும் காவல்நிலையம், சக காவலர்கள், நண்பர்களிடம் விசாரித்துப் பார்த்தும் அவர் சென்ற இடம் தெரியவில்லை. அவருடைய அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டு உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பழனிசாமியின் மனைவி இளங்கோதை, இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)