Skip to main content

அம்மா படம் எங்கே? நியூஸ் ஜெ தொடக்க விழாவில் கூச்சலிட்ட ரத்தத்தின் ரத்தங்கள்!

Published on 12/09/2018 | Edited on 12/09/2018

 

 

நியூஸ் ஜெ தொடக்க விழாவில் மேடையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் இடம் பெறாததால் பெண் நிர்வாகிகள் கூச்சலிட்டனர்.

 

அதிமுகவில் இபிஎஸ்,ஓபிஎஸ் ,தினகரன் அணியின் பிரச்சனையின் போது ஜெயா தொலைக்காட்சி டிடிவி தினகரன் தரப்பிடம் சென்றது. ஜெயா  தொலைக்காட்சி மற்றும் நமது எம்ஜிஆர்  நாளிதழை மீட்க கடுமையான முயற்சிகளை ஒபிஎஸ்- இபிஎஸ் மேற்கொண்டும் கடைசியில் பயனில்லை. அதன் பின்னர் அதிமுக சார்பில் நமது அம்மா நாளிதழ் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி தொடங்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இன்று நியூஸ் ஜெ-வின் லோகோ அறிமுகம், இணையதளத்தின் தொடக்கம் விழா சென்னையில் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.இதில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  இதில் தொடக்கத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் மேடையில் இருந்த டிஜிட்டல் திரையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இல்லாமல் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. மேடையின் கீழே இருந்த சென்னையை சேர்ந்த முன்னாள் பெண் கவுன்சிலர்கள் "அம்மா படம் எங்கே அம்மா படம் எங்கே" என்று கூச்சலிடவே மேடையில்   நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டு இருந்த நிர்மலா பெரியசாமி படம் வரும் வரும் என்று மைக்கிலே சொன்னார். அதன் பின்னரே ஜெயலலிதாவின் பெரிய படம் டிஜிட்டல் திரையில் தோன்றியது.

சார்ந்த செய்திகள்

Next Story

நியூஸ் க்ளிக் அலுவலகத்திற்கு சீல்!

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

News click office seal

 

டெல்லியில் உள்ள நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.

 

டெல்லியில் உள்ள நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் அலுவலக நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்த சோதனையின் போது பத்திரிகையாளர்களிடம் இருந்து மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.  இந்நிலையில் நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு டெல்லி போலீசார் சீல் வைத்துள்ளனர்.

 

சீனாவுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ய பணம் பெற்றதாக புகார் எழுந்ததால் நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் கீழ் நியூஸ் கிளிக்கிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை ஏற்கனவே நியூஸ் க்ளிக் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

சசிகலா மேல்முறையீட்டு மனுவில் இன்று விசாரணை

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

nn

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த நேரத்தில் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதன்பின் ஓபிஎஸ் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்று சேர்ந்தது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவின் பதவியைப் பறித்ததோடு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவிலிருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கினர். அதேபோல் அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் புதியதாகக் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி வசம் அதிமுக சென்றுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, ‘அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்; பொதுச்செயலாளர் இல்லாமல் நடந்த பொதுக்குழு மற்றும் பதவி நீக்கம் செல்லாது.’ என சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ‘அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சசிகலா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.